திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

வரை ஆர்ந்த மடமங்கை பங்கன் தன்னை; வானவர்க்கும்
வானவனை; மணியை; முத்தை;
அரை ஆர்ந்த புலித்தோல் மேல் அரவம் ஆர்த்த
அம்மானை; தம்மானை, அடியார்க்கு என்றும்;
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன் தன்னை;
ந்துருத்தி மேயானை; புகலூரானை;
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு
ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.

பொருள்

குரலிசை
காணொளி