திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

பார் முழுது ஆய் விசும்பு ஆகிப் பாதாளம்(ம்) ஆம்
பரம்பரனை; சுரும்பு அமரும் குழலாள் பாகத்து
ஆர் அமுது ஆம் அணி தில்லைக் கூத்தன் தன்னை;
வாட்போக்கி அம்மானை; “எம்மான்!” என்று
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி, வஞ்சனை
செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும்
சீர் அரசை; தென் பரம்பைக்குடியில் மேய திரு
ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.

பொருள்

குரலிசை
காணொளி