திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

உரு மூன்று ஆய் உணர்வின் கண் ஒன்று ஆனானை; ஓங்கார
மெய்ப்பொருளை; உடம்பிலுள்ளால்
கரு ஈன்ற வெங்களவை அறிவான் தன்னை; காலனைத் தன்
கழல் அடியால் காய்ந்து, மாணிக்கு
அருள் ஈன்ற ஆரமுதை; அமரர் கோனை; அள் ஊறி,
“எம்பெருமான்!” என்பார்க்கு என்றும்
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு
ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.

பொருள்

குரலிசை
காணொளி