நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
ஈரடி யாலே மூவுல களந்து
நாற்றிசை முனிவரும் ஐமுலன் மலரப்
போற்றிச்செய் கதிர்முதித் திருநெடு மாலன்(று)
ஆடிமுதி யரியும் ஆதர வதனிற்
கதுமுரண் ஏனம் ஆகி முன்கலந்(து)
ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்(து)
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியுங் காணா மலர் அடி இணைகள்,
வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில்,
யானை முதலா எறும்பு ஈறு ஆய,
ஊனம் இல், யோனியின் உள் வினை பிழைத்தும்;
மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்;
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்;
மும் மதி தன்னுள் அம் மதம் பிழைத்தும்;
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்;
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்;
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்;
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்;
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்;
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்;
தக்க தச மதி தாயொடு தான் படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்;
சிவ.அ.தியாகராசன்