வினையிலே கிடந்தேனை, புகுந்து நின்று, போது, நான்
வினைக்கேடன் என்பாய் போல,
இனையன் நான் என்று உன்னை அறிவித்து, என்னை
ஆட்கொண்டு, எம்பிரான் ஆனாய்க்கு,இரும்பின் பாவை
அனைய நான், பாடேன்; நின்று ஆடேன்; அந்தோ!
அலறிடேன்; உலறிடேன்; ஆவி சோரேன்;
முனைவனே! முறையோ, நான் ஆன ஆறு?
முடிவு அறியேன்; முதல், அந்தம், ஆயினானே!
சிவ.அ.தியாகராசன்