பேசின், தாம் ஈசனே, எந்தாய், எந்தை
பெருமானே! என்று என்றே பேசிப் பேசி;
பூசின், தாம் திருநீறே நிறையப் பூசி;
போற்றி எம்பெருமானே! என்று; பின்றா
நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை
ஆண்டானே! அவா வெள்ளக் கள்வனேனை,
மாசு அற்ற மணிக் குன்றே! எந்தாய்! அந்தோ!
என்னை, நீ ஆட்கொண்ட வண்ணம் தானே?
சிவ.அ.தியாகராசன்