பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வளர் பிறையில் தேவர் தம் பாலின் மன்னி உளர் ஒளி பானுவின் உள்ளே ஒடுங்கித் தளர்வு இல் பிதிர் பதம் தங்கிச் சசியுள் உளது உறும் யோகி உடல் விட்டால் தானே.
தான் இவை ஒக்கும் சமாதி கை கூடாது போன வியோகி புகல் இடம் போந்து பின் ஆனவை தீர நிரந்தர மாயோகம் ஆனவை சேர்வார் அருளின் சார்வாகியே.
தான் இவ்வகையே புவியோர் நெறி தங்கி ஆன சிவயோகத்து ஆம் ஆறு அவ்விந்து தான் அதில் அந்தச் சிவ யோகி ஆகு முன் ஊனத்தோர் சித்தி வந்தோர் காயம் ஆகுமே.
சிவயோகி ஞானி சிதைந்து உடல் விட்டால் தவ லோகம் சேர்ந்து பின் தான் வந்து கூடிச் சிவ யோக ஞானத்தால் சேர்ந்து அவர் நிற்பர் புவலோகம் போற்றுநர் புண்ணியத் தோரே.
ஊனம் இல் ஞானி நல் யோகி உடல் விட்டால் தான் அற மோனச் சமாதியுள் தங்கியே தான் அவன் ஆகும் பரகாயம் சாராதே ஊனம் இல் முத்தராய் மீளார் உணர்வு உற்றே.
செத்தார் பெறும் பயன் ஆவது ஏது எனில் செத்து நீர் சேர்வது சித்தினைக் கூடிடில் செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம் செத்தார் சிவம் ஆகியே சித்தர் தாமே.
உன்னக் கருவிட்டு உரவோன் அரன் அருள் பன்னப் பரனே அருள் குலம் பாலிப்பன் என்னப் புதல்வர்க்கும் வேண்டி இடு ஞானி தன் இச்சைக்கு ஈசன் உருச் செய்யும் தானே.
எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத் தங்கும் சிவஞானிக்கு எங்கும் ஆம் தற்பரம் அங்கு ஆங்கு என நின்று சகம் உண்ட வான் தோய்தல் இங்கே இறந்து எங்குமாய் நிற்கும் ஈசனே.