திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஊனம் இல் ஞானி நல் யோகி உடல் விட்டால்
தான் அற மோனச் சமாதியுள் தங்கியே
தான் அவன் ஆகும் பரகாயம் சாராதே
ஊனம் இல் முத்தராய் மீளார் உணர்வு உற்றே.

பொருள்

குரலிசை
காணொளி