பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோ தாயி சாக்கிர சொப்பனம் தன் இடை மா மாயை சாக்கிரம் தன்னில் சுழுத்தி தற் காமியம் சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே.
மாயை எழுப்பும் கலாதியை மற்று அதின் நேய விராகு ஆதி ஏய்ந்த துரியத்துத் தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி ஆயினன் அந்தச் சகலத்து உளானே.
மேவிய அந்தகன் விழி கண் குருடன் ஆம் ஆவயின் முன் அடிக் காணும் அது கண்டு மேவும் தடி கொண்டு சொல்லும் விழிபெற மூவயினான் மா முயலும் கருமமே.
மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள் ஒத்து அங்கு இருந்து உயிர் உண்ணும் ஆறுபோல் அத்தனும் ஐம் பொறி ஆடகத்து உள் நின்று சத்தம் முதல் ஐந்தும் தான் உண்ணும் ஆறே.
வைச்சன வச்சு வகை இருபத்து அஞ்சு முச்சும் ஊடன் அணைவான் ஒருவன் உளன் பிச்சன் பெரியன் பிறப்பு இலி என்று என்று நச்சி அவன் அருள் நான் உய்ந்த வாறே.
நாலு ஆறு உடன் புருடன் அற்று தத்துவமுடன் வேறு ஆன ஐ ஐந்து மெய்ப்புருடன் பரம் கூறா வியோமம் பரம் எனக் கொண்டனன் வேறு ஆன நாலு ஏழு வேத அந்த தத்துவமே.
ஏலம் கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை கோலம் கொண்டு ஆங்கே குணத்தின் உடன்புக்கு மூலம் கொண்டு ஆங்கே முறுக்கி முக்கோணிலும் காலம் கொண்டான் அடி காணலும் ஆமே.
நாடிகள் பத்தும் நலம் திகழ் வாயுவும் ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும் கூடிய காமம் குளிக்கும் இரதமும் நாடிய நல்ல மனமும் உடலிலே.
பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும் உய்த்த துரியமும் உள் உணர் காலமும் மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும் தத்துவ நால் ஏழு என உன்னத் தக்கதே.
விளங்கிடும் முந்நூற்று முப்பதோடு ஒருபான் தளம் கொள் இரட்டிய ஆறு நடந்தால் வணங்கிடும் ஐம் மலம் வாயு எழுந்து விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே.
நாலு ஒரு கோடியே நாற்பத்து எண் ஆயிரம் மேலும் ஓர் ஐந்து நூறு வேறாய் அடங்கிடும் பால் அவை தொண்ணூறோடு ஆறு உட் படும் அவை கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே.
ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொது என்பர் ஆகின்ற ஆறா அரும் சைவர் தத்துவம் ஆகின்ற நால் ஏழ் வேதாந்தி வயின் அவர்க்கு ஆகின்ற நாலு ஆறு ஐந்தும் மாய வாதிக்கே.
தத்துவம் ஆனது தன் வழி நின்றிடில் வித்தகன் ஆகி விளங்கி இருக்கலாம் பொய்த்தவம் ஆம் அவை போயிடும் அவ்வழி தத்துவம் ஆவது அகார எழுத்தே.
அறிவு ஒன்று இலாதன ஐ ஏழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியாது இருந்தேன் அறிகின்றாய் நீ என்று அருள் செய்தார் நந்தி அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே.
சாக்கிர சாக்கிரம் ஆதி தனில் ஐந்தும் ஆக்கும் மல அவத்தை ஐந்து நனவு ஆதி போக்கி இவற்றொடும் பொய்யான ஆறு ஆறு நீக்கி நெறி நின்றான் ஆகியே நிற்குமே.
ஆணவம் ஆதி மலம் ஐந்து அலரோனுக்கு ஆணவம் ஆதி நான்கு ஆம் ஆற் அரனுக்கு ஆணவம் ஆதி மூன்று ஈசர்க்கு இரண்டு என்ப ஆணவம் ஒன்றே சதா சிவற்கு ஆவதே