பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில் ஆம்பதம் எட்டாக இட்டிடின் மேல் அதாம் காண்பதம் தத்துவம் நாலுள் நயனமும் நாம் பதம் கண்டபின் நாடறிந்தோமே.
நாடு அறி மண்டலம் நல்ல இக் குண்டத்துக் கேடு அற வீதியும் கொடர்ந்து உள் இரண்டழி பாடு அறி பத்துடன் ஆறு நடு வீதி ஏடு அற நாலு ஐந்து இட வகை ஆமே.
நாலு ஐந்து இடவகை உள்ளது ஓர் மண்டலம் நாலு நல் வீதியுள் நல்ல இலிங்கம் ஆய் நாலு நல் கோணமும் நல் நால் இலிங்கம் ஆய் நாலு நல் பூ நடு நண்ணல் அவ்வாறே.
ஆறு இருபத்து நால் அஞ்சு எழுத்து அஞ்சையும் வேறு உரு ஆக விளைந்து கிடந்தது தேறி நிருமல சிவாய நம என்று கூறு மின் கூறில் குறைகளும் இல்லையே.
குறைவதும் இல்லை குரை கழல் கூடும் அறைவதும் ஆரணம் அவ் எழுத்து ஆகித் திறம் அது ஆகத் தெளிய வல்லார்க்கு இறவு இல்லை என்று என்று இயம்பினர் காணே.
காணும் பொருளும் கருதிய தெய்வமும் பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும் ஊணும் உணர்வும் உறக்கமும் தான் ஆகக் காணும் கனகமும் காரிகை ஆமே.
ஆமே எழுத்து அஞ்சு ஆம் வழியே ஆகப் போமே அது தானும் போம் வழியே போனால் நாமே நினைத்தன செய்யலும் ஆகும் பார் மேல் ஒருவர் பகை இல்லை தானே.
பகை இல்லை என்றும் பணிந்தவர் தம்பால் நகை இல்லை நாள் நாளும் நன்மைகள் ஆகும் வினை இல்லை என்றும் விருத்தமும் இல்லை தகை இல்லை தானும் சலம் அது ஆமே.
ஆரும் உரை செய்யலாம் அஞ்சு எழுத்தாலே யாரும் அறியாத ஆனந்த ரூபம் ஆம் பாரும் விசும்பும் பகலும் அதி அதி ஊனும் உயிரும் உணர்வு அது ஆமே.