திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆமே எழுத்து அஞ்சு ஆம் வழியே ஆகப்
போமே அது தானும் போம் வழியே போனால்
நாமே நினைத்தன செய்யலும் ஆகும்
பார் மேல் ஒருவர் பகை இல்லை தானே.

பொருள்

குரலிசை
காணொளி