திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை
மற்றும் அவனே வனைய வல்லானே.

பொருள்

குரலிசை
காணொளி