திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏத்தினர் எண் இலி தேவர் எம் ஈசனை
வாழ்த்தினர் வாசப் பசும் தென்றல் வள்ளல் என்று
ஆர்த்தனர் அண்டம் கடந்தப் புறநின்று
காத்தனர் என்னும் கருத்து அறியாரே.

பொருள்

குரலிசை
காணொளி