பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
இரும்பு தரு மனத்தேனை, ஈர்த்து, ஈர்த்து, என் என்பு உருக்கி, கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை உன் கழல் இணைகள்; ஒருங்கு திரை உலவு சடை உடையானே! நரிகள் எல்லாம் பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே, உன் பேர் அருளே!