பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பண் ஆர்ந்த மொழி மங்கை பங்கா! நின் ஆள் ஆனார்க்கு உண் ஆர்ந்த ஆர் அமுதே! உடையானே! அடியேனை மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய், நீ வா என்ன; கண் ஆர உய்ந்த ஆறு அன்றே, உன் கழல் கண்டே!