பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சூதம் நெருங்கு குலைத் தெங்கு பலவு பூகம் சூழ்பு உடைத்தாய் வீதிதோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை.