திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று
ஓவாத ஒளிவிளக்குச் சிவன் கோயில் உள் எரித்து,
நா ஆரப் பரவுவார்; நல்குரவு வந்து எய்தத்
தேவாதி தேவர்பிரான் திருத்தில்லை சென்று அடைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி