அணி பெறு வட மர நிழலினில், அமர்வொடும் அடி இணை
இருவர்கள்
பணிதர, அறநெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல்
அணி,
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல்,
திரு மிழலையே.