அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன், அளவிடல்
ஒழிய, ஒரு
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர,
வரல்முறை,
"சய சய!" என மிகு துதிசெய, வெளி உருவிய அவன் உறை பதி
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே.