இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி
சமண்விரகினர்,
திகழ் துவர் உடை உடல் பொதிபவர், கெட, அடியவர் மிக அருளிய
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய
புவி
திகழ் சுரர்தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ்
திரு மிழலையே.