திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: பியந்தைக்காந்தாரம்

தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும் சாந்தமும்
புகையும்
கொண்டு கொண்டு அடி பரவி, குறிப்பு அறி முருகன்
செய் கோலம்
கண்டு கண்டு, கண் குளிரக் களி பரந்து, ஒளி மல்கு கள்
ஆர்
வண்டு பண் செயும் புகலூர் வர்த்த மானீச்சரத்தாரே

பொருள்

குரலிசை
காணொளி