திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: பியந்தைக்காந்தாரம்

ஈசன், ஏறு அமர் கடவுள், இன் அமுது, எந்தை,
எம்பெருமான்,
பூசும் மாசு இல் வெண் நீற்றர் பொலிவு உடைப் பூம்
புகலூரில்,
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய்
முடிமேல்
வாசமாமலர் உடையார், வர்த்தமானீச்சரத்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி