பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சாம வேதம் ஓர் கீதம் ஓதி அத் தசமுகன் பரவும் நாம தேயம் அது உடையார், நன்கு உணர்ந்து, "அடிகள்" என்று ஏத்த; காம தேவனை வேவக் கனல் எரி கொளுவிய கண்ணார்; வாம தேவர் தண் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே.