திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: பியந்தைக்காந்தாரம்

சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு
நாரணன் கருத்து அழிய நகை செய்த சடை முடி நம்பர்;
ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சுவித்து, அருளுதல்
பொருட்டால்,
வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச்சரத்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி