பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தழை கொள் சந்தும்(ம்), அகிலும், மயில்பீலியும், சாதியின் பழமும், உந்திப் புனல் பாய் பழங்காவிரித் தென்கரை, நழுவு இல் வானோர் தொழ, நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.