தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர், துளங்கு ஒளி சேர்
நீறு சாந்து என உகந்து அணிவர், வெண்பிறை மல்கு
சடைமுடியார்
நாறு சாந்து இளமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த
பிரான்,
வீறு சேர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.