வளம் கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாள்
அரவும்
களம் கொளச் சடை இடை வைத்த எம் கண்ணுதல்,
கபாலியார்தாம்,
துளங்கு நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த
பிரான்,
விளங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.