திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

பொறி உலாம் அடு புலி உரிவையர், வரி அராப் பூண்டு
இலங்கும்
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர், சீர்மையை நினைப்பு
அரியார்
மறி உலாம் கையினர், மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த
பிரான்,
வெறி உலாம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

பொருள்

குரலிசை
காணொளி