நீண்டு இலங்கு-அவிர் ஒளி நெடு முடி அரக்கன்-”இந்
நீள்வரையைக்
கீண்டு இடந்திடுவன்” என்று எழுந்தவன்-ஆள்வினை
கீழ்ப்படுத்தார்
பூண்ட நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த
பிரான்,
வேண்டு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.