“பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரைக்
கங்கை
வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன், விடை ஏறும்
வள்ளல் வலஞ்சுழிவாணன்” என்று மருவி நினைந்து ஏத்தி,
உள்ளம் உருக, உணருமின்கள்! உறு நோய் அடையாவே.