திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருவிருத்தம்

“எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும்(ம்) இறைவா, முறை!” என்று
இட்டார் அமரர் வெம் பூசல் எனக் கேட்டு, எரிவிழியா,
ஒட்டாக் கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால்
அட்டான் அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

பொருள்

குரலிசை
காணொளி