திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய்;
கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய்;
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய்;
அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய்;
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய்;
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனான் கண்டாய்;
மற்று இருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி
மன்னும் மணாளன் தானே.

பொருள்

குரலிசை
காணொளி