திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

நெற்றித் தனிக் கண் உடையான் கண்டாய்; நேரிழை
ஓர் பாகம் ஆய் நின்றான் கண்டாய்;
பற்றிப் பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய்; பல் ஊர்
பலி தேர் பரமன் கண்டாய்;
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய்; செழு
மா மதி சென்னி வைத்தான் கண்டாய்;
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி
மன்னும் மணாளன் தானே.

பொருள்

குரலிசை
காணொளி