திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

உலந்தார் தம் அங்கம் அணிந்தான் கண்டாய்;
உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய்;
நலம் திகழும் கொன்றைச் சடையான் கண்டாய்;
நால்வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்;
உலந்தார் தலை கலனாக் கொண்டான் கண்டாய்;
உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த
மழபாடி மன்னும் மணாளன் தானே.

பொருள்

குரலிசை
காணொளி