திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

உரம் கொடுக்கும் இருள் மெய்யர், மூர்க்கர், பொல்லா
ஊத்தைவாய்ச் சமணர் தமை உறவாக் கொண்ட
பரம் கெடுத்து, இங்கு அடியேனை ஆண்டு கொண்ட
பவளத்தின் திரள் தூணே! பசும்பொன் முத்தே!
“புரம் கெடுத்து, பொல்லாத காமன் ஆகம் பொடி
ஆக விழித்து அருளி, புவியோர்க்கு என்றும்
வரம் கொடுக்கும் மழபாடி வயிரத்தூணே!” என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பொருள்

குரலிசை
காணொளி