திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

செந்தாமரைப் போது அணிந்தான் கண்டாய்; சிவன்
கண்டாய்; தேவர் பெருமான் கண்டாய்;
பந்து ஆடு மெல் விரலாள் பாகன் கண்டாய்;
பாலோடு, நெய், தயிர், தேன், ஆடி கண்டாய்;
மந்தாரம் உந்தி வரும் நீர்ப்பொன்னி
வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய்
கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பொருள்

குரலிசை
காணொளி