திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

அணவு அரியான் கண்டாய்; அமலன் கண்டாய்;
அவி நாசி கண்டாய்; அண்டத்தான் கண்டாய்;
பண மணி மா நாகம் உடையான் கண்டாய்;
பண்டரங்கன் கண்டாய்; பகவன் கண்டாய்;
மணல் வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான்
கண்டாய்; மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பொருள்

குரலிசை
காணொளி