திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

அக்கு, அரவம், அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய்;
அருமறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்;
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய்; சதாசிவன்
காண்; சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்;
மைக் கொள் மயில்-தழை கொண்டு வரும் நீர்ப்பொன்னி
வலஞ்சுழியான் கண்டாய்; மழுவன் கண்டாய்
கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பொருள்

குரலிசை
காணொளி