திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

தொண்டர்கள் தம் தகவின் உள்ளார் போலும்; தூநெறிக்கும் தூ
நெறி ஆய் நின்றார் போலும்;
பண்டு இருவர் காணாப் படியார் போலும்; பத்தர்கள் தம்
சித்தத்து இருந்தார் போலும்;
கண்டம் இறையே கறுத்தார் போலும்; காமனையும் காலனையும்
காய்ந்தார் போலும்;
இண்டைச் சடை சேர் முடியார் போலும் இன்னம்பர்த் தான்
தோன்றி ஈசனாரே.

பொருள்

குரலிசை
காணொளி