திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து,
அளித்த கள்வர் போலும்;
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும்; தேவர்க்கும்
தேவர் ஆம் செல்வர் போலும்;
மருவில் பிரியாத மைந்தர் போலும்; மலர் அடிகள் நாடி
வணங்கல் உற்ற
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர்த்
தான் தோன்றி ஈசனாரே.

பொருள்

குரலிசை
காணொளி