திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

மட்டு மலியும் சடையார் போலும்; மாதை ஓர் பாகம் உடையார்
போலும்;
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்; காலன் தன் வாழ்நாள்
கழிப்பார் போலும்;
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும்; ஞாலம், எரி, நீர்,
வெளி, கால், ஆனார் போலும்;
எட்டுத் திசைகளும் தாமே போலும் இன்னம்பர்த் தான்
தோன்றி ஈசனாரே.

பொருள்

குரலிசை
காணொளி