திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும்; பத்தர்கள் தம்
சித்தத்து இருந்தார் போலும்;
கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும்; கற்றவர்கள்
ஏதம் களைவார் போலும்;
பொல்லாத பூதப்படையார் போலும்; பொருகடலும்
ஏழ்மலையும் தாமே போலும்;
எல்லாரும் ஏத்தத் தகுவார் போலும் இன்னம்பர்த் தான்
தோன்றி ஈசனாரே.

பொருள்

குரலிசை
காணொளி