பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
வேறா உன் அடியேன், விளங்கும் குழைக் காது உடையாய்! தேறேன், உன்னை அல்லால்; சிவனே! என் செழுஞ்சுடரே! காறு ஆர் வெண்மருப்பா! கடவூர்த் திரு வீரட்டத்துள் ஆறு ஆர் செஞ்சடையாய்! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .