பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
நீறு நும் திருமேனி நித்திலம்; நீல் நெடுங் கண்ணினாளொடும் கூறராய் வந்து நிற்றிரால்; கொணர்ந்து இடகிலோம், பலி; நடமினோ! பாறு வெண்தலை கையில் ஏந்தி, “பைஞ்ஞீலியேன்” என்றீர், அடிகள் நீர்; ஆறு தாங்கிய சடையரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!