பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
ஏடு உலாம் மலர்க் கொன்றை சூடுதிர்; என்பு எலாம் அணிந்து என் செய்வீர்? காடு, நும் பதி; ஓடு, கையது; காதல் செய்பவர் பெறுவது என்? “பாடல் வண்டு இசை ஆலும் சோலைப் பைஞ்ஞீலியேன்” என்று நிற்றிரால்; ஆடல் பாடலும் வல்லிரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!