திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி,
கொக்கரை, குட முழவினோடு இசை கூடிப் பாடி நின்று ஆடுவீர்;
“பக்கமே குயில் பாடும் சோலைப் பைஞ்ஞீலியேன்” என நிற்றிரால்;
அக்கும் ஆமையும் பூண்டிரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!

பொருள்

குரலிசை
காணொளி