பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
முற்றும் சடை முடி மேல் முதிரா இளம்பிறையன், ஒற்றைப் பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான், செற்றம் இல் சீரானைத் திரு ஆப்பனூரானைப் பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.