பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
எனக்கு இனித் தினைத்தனைப் புகல் இடம் அறிந்தேன்; பனைக் கனி பழம் படும் பரவையின் கரை மேல் எனக்கு இனியவன், தமர்க்கு இனியவன், எழுமையும் மனக்கு இனியவன் தனது இடம் வலம்புரமே.
புரம் அவை எரிதர வளைந்த வில்லினன், அவன்; மர உரி புலி அதள் அரைமிசை மருவினன்; அர உரி இரந்தவன், இரந்து உண விரும்பி நின்று; இரவு எரி ஆடி தன் இடம் வலம்புரமே.
நீறு அணி மேனியன், நெருப்பு உமிழ் அரவினன், கூறு அணி கொடுமழு ஏந்தி(ய) ஒர் கையினன், ஆறு அணி அவிர்சடை அழல் வளர் மழலை வெள்- ஏறு அணி அடிகள் தம் இடம் வலம்புரமே.
கொங்கு அணை சுரும்பு உண, நெருங்கிய குளிர் இளந் தெங்கொடு பனை பழம் படும் இடம்; தேவர்கள் தங்கிடும் இடம்; தடங்கடல்-திரை புடைதர எங்களது அடிகள் நல் இடம் வலம்புரமே.
கொடு மழு விரகினன், கொலை மலி சிலையினன், நெடு மதில் சிறுமையின் நிரவ வல்லவன், இடம்; படு மணி முத்தமும் பவளமும் மிகச் சுமந்து இடு மணல் அடை கரை இடம் வலம்புரமே.
கருங்கடக் களிற்று உரிக் கடவுளது இடம்; கயல் நெருங்கிய நெடும் பெ(ண்)ணை அடும்பொடு விரவிய மருங்கொடு, வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ந்து இருங்கடல் அணைகரை இடம் வலம்புரமே.
நரி புரி காடு அரங்கா நடம் ஆடுவர், வரி புரி பாட நின்று ஆடும் எம்மான், இடம்; புரி சுரி வரி குழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து எரி எரி ஆடி தன் இடம் வலம்புரமே.
பாறு அணி முடைதலை கலன் என மருவிய, நீறு அணி, நிமிர்சடை முடியினன்; நிலவிய மாறு அணி வரு திரை வயல் அணி பொழிலது, ஏறு உடை அடிகள் தம் இடம் வலம்புரமே.
சடசட விடு பெ(ண்)ணை பழம் படும் இட வகை; பட வடகத்தொடு பல கலந்து உலவிய கடை கடை பலி திரி கபாலிதன் இடம் அது; இடி கரை மணல் அடை இடம் வலம்புரமே.
குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர் கண்டவர், கண்டு அடி வீழ்ந்தவர், கனை கழல் தண்டு உடைத் தண்டிதன் இனம் உடை “அர” உடன் எண் திசைக்கு ஒரு சுடர் இடம் வலம்புரமே.
வரும் கலமும் பல பேணுதல், கருங்கடல், இருங் குலப் பிறப்பர் தம் இடம் வலம்புரத்தினை, அருங் குலத்து அருந்தமிழ் ஊரன்-வன்தொண்டன்-சொல் பெருங் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே.