திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தலை நின்ற தாழ்வரை மீது தவம் செய்து
முலை நின்ற மாது அறி மூர்த்தியை யானும்
புலை நின்ற பொல்லாப் பிறவி கடந்து
கலை நின்ற கள்வனில் கண்டு கொண்டேனே.

பொருள்

குரலிசை
காணொளி