பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பாரோர், விண்ணோர், பரவி ஏத்தும் பரனே! பரஞ்சோதி! வாராய்; வாரா உலகம் தந்து, வந்து ஆட்கொள்வானே! பேர் ஆயிரமும் பரவித் திரிந்து, எம் பெருமான் என ஏத்த, ஆரா அமுதே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!